×

வேலூர், அரக்கோணம் உள்ளிட்ட 4 எம்பி தொகுதி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சந்திப்பு: இந்திய அளவில் விடியல் தர பணியாற்ற அறிவுரை

சென்னை: வேலூர், அரக்கோணம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நேற்று ஆலோசனை நடத்தியது. திமுக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு தொகுதி வாரியான நிர்வாகிகள் சந்திப்பை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தி வருகிறது. 8வது நாளாக நேற்று காலை வேலூர், அரக்கோணம் தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது. குழுவை சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பில் வேலூர், அரக்கோணம், மக்களவை தொகுதிக்குள் வருகிற மாவட்டங்களின் அமைச்சர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களுடன் தேர்தல் முன்னேற்பாடு பணிகள்-தொகுதியில் நிலவும் சூழல்-தேர்தலுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து குழுவினர் விரிவாக கருத்துகளை கேட்டறிந்தனர். 2021ல் தமிழ்நாட்டில் விடியலைத் தந்தது போல, 2024ல் இந்திய அளவிலும் விடியலைத் தர வேண்டும் என்ற லட்சியதோடு ஒற்றுமையோடு பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளுடன் சந்திப்பின் போது, ஜனநாயகப் போரின் முக்கிய கட்டத்தில் இருக்கும் நாம் அனைவரும் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என குழுவினர் கேட்டுக்கொண்டனர். மாலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி தொகுதிகளுக்கான நிர்வாகிகளுடன் சந்திப்பு நடந்தது.

The post வேலூர், அரக்கோணம் உள்ளிட்ட 4 எம்பி தொகுதி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சந்திப்பு: இந்திய அளவில் விடியல் தர பணியாற்ற அறிவுரை appeared first on Dinakaran.

Tags : DMK ,Vellore ,Arakkonam ,India ,CHENNAI ,DMK Election Coordination Committee ,Villupuram ,Kallakurichi ,DMK Parliamentary Election Supervision and Coordination Committee ,Anna University ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...